இரு மாநிலங்களின் முதல்வராக இருந்த என்.டி.திவாரி மரணம்!

அக்டோபர் 18, 2018 530

புதுடெல்லி (18 அக் 2018): உத்திர பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் முதல்வராக இருந்த என்.டி திவாரி காலமானார்.

93 வயதான என்.டி திவாரி, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார்.

1925ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பிறந்தவர் என்.டி.திவாரி. உ.பி. முதல்வராக 1976 முதல் 77 வரையிலும், 84 முதல் 85 வரையிலும் பின்னர் 88 முதல் 89 வரையிலும் இருந்துள்ளார். 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராக இருந்தவர் திவாரி.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி அவரது பிறந்த நாளிலேயே மரணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...