கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு நடந்த அதிசயம்!

அக்டோபர் 18, 2018 543

புனே (18 அக் 2018): கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கு கருப்பை பிரச்சினை காரணமாக குழந்தை பேறு கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையுடன் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. கடந்த 2017ம் ஆண்டு அவரது தாயாரிடம் இருந்து கருப்பை தானம் பெற்று வெற்றிகரமாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதன் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் மீனாட்சி கருவுற்றார். கருவின் வளர்ச்சி குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இந்த நிலையில், மீனாட்சிக்கு இன்று ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 1450 கிராம் உள்ளதாகவும், குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.'

இந்தியாவில், கருப்பை மாற்று சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்துள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...