தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதி 50 பேர் பலி - நேரடி வீடியோ!

அக்டோபர் 19, 2018 643

அமிர்சதரஸ் (19 அக் 2018): பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று மாலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜோதா பதக் என்ற இடத்தில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றபோது, அதனை 700 க்கும் அதிகமான மக்கள் ரயில் பாதையிலும் நின்று கொண்டு பார்த்தனர்.

வீடியோ

அப்போது, அங்கு வந்த ரயில் மக்கள் மீது மோதியதில் நூற்றுக்கணக்கானோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் அளித்த தகவலில் சுமார் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இவ்விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...