ரிஹானா பாத்திமாவை கைது செய்ய முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!

அக்டோபர் 20, 2018 1233

திருவனநதபுரம் (20 அக் 2018): சபரிமலை கோவிலுக்குச் சென்று மத மோதலை உருவாக்க முயன்ற ரிஹானா பாத்திமாவை கைது செய்ய வேண்டும் என்று கேரள முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப் பட்டபோது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். அதில் ஒருவர் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றும் கவிதா மற்றொருவர் பெண்ணியவாதி என்று கூறப்படும் ரஹானா பாத்திமா என தெரிய வந்தது.

பெண்ணிய வாதியாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ரிஹானா பாத்திமா முஸ்லிம் பெயர் தாங்கியுள்ளாரே ஒழிய அவர் முஸ்லிமாக வாழவில்லை என்பதே உண்மை. ஒரு மாடலிங் பெண்ணான அவர் ஏற்கனவே இந்து ஒருவரை திருமணம் செய்து இந்துவாக வாழ்ந்து வருகிறார். மேலும் ஆபாச படம் ஒன்றிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்நிலையில்தான் தன்னை ஐயப்ப பக்தராக கூறிக் கொண்டு தற்போது பிரச்சனைக்குரிய நேரத்தில் சபரிமலையில் நுழைந்தார். இதனால் ஊடகங்கள் இவ்விவகாரத்தை பூதாகரமாக்கின. மேலும் இந்து அமைப்புகள் இதனை சாதகமாக்கி கலவரத்தை தூண்ட முயன்றதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து ரிஹானா பாத்திமா பதற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் மத மோதலை ஏற்படுத்துவதற்காகவும் சபரிமலைக்குள் நுழைய முற்பட்டுள்ளார் எனக் கூறி கேரள முஸ்லிம் அமைப்புகள் ரிஹானாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...