பாஜக பிரமுகர் போலீஸ் மீது தாகுதல் - வீடியோ!

அக்டோபர் 21, 2018 758

மீரட் (21 அக் 2018): உத்தரப்பிரதேசம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கங்கர்கேதா பகுதியில் மணீஷ் என்ற பாஜக கவுன்சிலரின் ஓட்டலுக்கு உணவருந்த சென்ற காவல்துறை ஆய்வாளர் அவரது நண்பரான பெண் வழக்கறிஞருடன் உணவருந்தி கொண்டிருந்த போது, உணவு பரிமாறுபவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த உணவக உரிமையாளரும் பாஜக கவுன்சிலருமான மணீஷ், அந்த காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி சரமாரியாகத் தாக்கினார்.

வீடியோ

உடன் வந்த பெண் வழக்கறிஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களைப் போட்டு உடைத்தார். காவல் உதவி ஆய்வாளரை அடித்த பாஜக கவுன்சிலர் மணீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...