நடிகையும் மாடலுமான ரிஹானா பாத்திமா முஸ்லிமாக பிறாந்தாலும் இந்துவை திருமணம் செய்து கொண்டு இந்துவாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஊடகங்கள் அவரை முஸ்லிம் என்பதாகவே காட்டின. ஆனால் அவரது பின்னணியை கூறவில்லை.
இதனை அடுத்து அவரது ஆபாச படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் அவரது ஃபேஸ்புக் பதிவில் சபரிமலைக்கு மாலையிட்டது போல ஆபாசமாக பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராதா கிருஷ்ண மேனன் என்பவர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், மத உணர்வுகளை சிதைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.