வினையில் முடிந்த ஃபேஸ்புக் நட்பு!

அக்டோபர் 21, 2018 537

ஐதராபாத் (21 அக் 2018): ஃபேஸ்புக் நட்பால் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கு மணிகண்டா என்பவருடன் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மாணவியை மணிகண்டா லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்துள்ளார். அவரும் அங்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்டா அவருடைய நண்பர்களுடன் அந்த மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து அந்த மாணவியை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...