ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹாதியா ஷபின் ஜஹான்!

அக்டோபர் 21, 2018 846

திருவனந்தபுரம் (21 அக் 2018): எங்கள் மீது அவதூறு பரப்பிய ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக் காட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹாதியா மற்றும் ஷபீன் ஜஹான் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்ட கேரளப்பெண் ஹாதியாவை, தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது என்ற புகாரின் அடிப்படையில் ஹாதியா மற்றும் அவரது கணவர் ஷபின் ஜஹான் ஆகியோர் மீது நடத்தப் பட்ட விசாரணை முடிவில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியாததால் இவர்கள் தவிர சுமார் 11 லவ் ஜிஹாத் வழக்குகளை இனியும் தொடர்ந்து விசாரிக்கப் போவதில்லை என்று தெரிவித்து வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் என அறியப் படுபவர்கள் ஹாதியா மற்றும் ஷபீன் ஜஹான். இவர்கள் இருவரும் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் இருவரும் பெரும் துயரத்தை சந்தித்து விடுவிக்கப் பட்டுள்ளோம். எங்களை ஒருபுறம் துன்புறுத்தியதில் ஊடகங்களுக்கும் பங்குண்டு, அதில் குறிப்பாக டைம்ஸ் நவ் மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகியவை முக்கியமானவை. இவ்விரண்டு ஊடகங்களும் எங்கள் மீது அவதூறு பரப்பியமைக்காக மன்னிப்பு கேட்கும் என எதிர் பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...