ரெஹானாவுக்கு எதிராக முஸ்லிம் ஜமாத் அதிரடி நடவடிக்கை!

அக்டோபர் 21, 2018 705

திருவனந்தபுரம் (21 அக் 2018): ரெஹானா ஃபாத்திமாவை முஸ்லிம் மதத்திலிருந்து நீக்கி வைப்பதாக கேரள முஸ்லிம் ஜமாத் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இம்மாதம் 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கிற்காக திறக்கப்பட்டது.

இதையடுத்து, பிரபல மாடலும் ஆபாச நடிகையுமான ரெஹானா பாத்திமாவும், ஹைதராபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா ஜக்கலாவும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றாலும், கோவிலுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. பாதுகாப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு முஸ்லிம் பெயரில் சென்று பல லட்சம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக செயல் பட்ட ரெஹானா முஸ்லிமாக இருக்க தகுதியில்லை எனக் கூறி அவரை முஸ்லிம் மதத்திலிருந்து நீக்கம் செய்வதாகவும் இதுகுறித்து எர்ணாகுளம் மத்திய ஜமாத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் கேரளா இஸ்லாமிய ஜமாத் தலைவர் பூங்குஞ்சு தெரிவித்தார்.

மேலும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயன்றதற்காக அவர் மீது நீதிமன்றம் 153A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...