தொடரும் நிர்பயாக்கள் - மற்றும் ஒரு கொடூரம்!

அக்டோபர் 22, 2018 545

கொல்கத்தா (22 அக் 2018): மேற்கு வங்கத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது பிறப்புறுப்பில் இரும்பும் கம்பியை சொருகிய கொடூரர்கள்.

மேற்கு வங்கம் ஜல்பய்குரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி பெண்ணின் கணவர், ரத்ன முண்டா மற்றும் பரிமல் ராய் என்ற இருவரையும் தனது வீட்டிற்கு மது அருந்த அழைத்துள்ளார். ஆனால், கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் இருவரும் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில், கணவன் இரவு 10 மணிவரை வீடு திரும்பததால் அந்தப் பெண் அவர்களை அங்கேயே இருக்கும்படி கூறி விட்டு கணவனை தேடி சென்றாள்.

இந்நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் இருவரும், அந்த பெண்னை பின்தொடர்ந்து குளத்தின் அருகில் அவளை வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அவரது பிறப்புறுப்பில் இரும்பு கம்பியையும் சொருகி வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். அந்தப் பக்கம் வந்த ரிக்‌ஷா இழுக்கும் நபர் அந்தப் பெண்ணை பார்த்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்கக்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்று ஒரு சம்பவம், கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இதே போல் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...