தாயே மகனை கொன்றார் காரணம் ஏன் தெரியுமா?

அக்டோபர் 22, 2018 727

லக்னோ (22 அக் 2018): உத்திர பிரதேசத்தில் 23 வயது மகனை கொன்ற தாய் கைது செய்யப் பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சட்ட மேலவை தலைவர் ரமேஷ் யாதவின் இரண்டாவது மனைவி மீரா யாதவ். மாநில சுற்றுலாத்துறையில் பணியாற்றி வந்த இவர், பணியிலிருந்து விலகி தற்போது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், “சனிக்கிழமை நள்ளிரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகன் அபிஜித், நெஞ்சு வலியில் இறந்ததாக தாயார் உறவினரிடம் கூறினார். ஆனால் அவர் கூறியதில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டது. இதனையடுத்து, அபிஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூச்சித்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக அறிக்கை வெளியானது. இதனால், மீரா யாதவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மகன் குடித்துவிட்டு தவறாக நடக்க முயன்றான் அதனால் கொலை செய்தேன் என்பதை ஒப்புக் கொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...