முஸ்லிம் பெண் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுப்பு!

அக்டோபர் 22, 2018 750

பெங்களூரு (22 அக் 2018): பெங்களூரில் முஸ்லிம் பெண் என்பதால் வாடகைக்கு வீடு தர மறுத்து விட்டார்கள் என்று பாதிக்கப் பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஹீனா ரஹ்மான் என்ற சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து தெரிவிக்கையில் பெங்களூரில் வீடு வாடகைக்கு கேட்டு அலைந்தேன் முஸ்லிம் என்பதால் எனக்கும் என் குடும்பத்தினருக்கு வீடு கொடுக்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக அனைத்து மத நடுநிலையாளர்களும் கூடி விவாதிக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்க முயல வேண்டும். முஸ்லிம் என்ற அடையாளம் பாகுபடுத்தக் கூடியதாக நினைக்க வைத்தது யார்? என்பது குறித்து தீர ஆராய வேண்டும் அது குறித்து முஸ்லிம்கள் மீது தவறான பார்வை உள்ளவர்களுக்கு விவரிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றாக கூடி பேசாத வரை முஸ்லிம்கள் இந்தியாவில் தொடர்ந்து துன்புறுத்தப் பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...