ஏழை மாணவனுக்கு வீடு கட்டி கொடுத்த பள்ளி ஆசிரியர்கள்!

அக்டோபர் 24, 2018 600

கோழிக்கோடு (24 அக் 2018): கேரள மாநிலம் கோழிக் கோட்டில் ஏழை மாணவனுக்கு வீடு கட்டிக் கொடுத்து பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

கோழிக்கோடு கண்ணூத்து மஜீத் சலீனா தம்பதிகளின் மகன் சாபித். கோழிக்கோடு பூம்பாரை பாத்திமா மெமோரியல் மேல் நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் இவர் வகுப்பில் சிறந்த மாணவராகவும் இருந்து வந்தார். இவரின் குடும்பம் மிகவும் ஏழை குடும்பமாகும். சாபித் வீட்டில் இருந்து படிக்க கூட சரியான இருப்பிடம் இல்லாமல் இருந்து வந்தார். ஒரு நிலையில் அவர் படிப்பை தொடர்வது கூட கேள்விக் குறியாக இருந்தது.

இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் ஒரு முடிவு செய்தனர். அவர் இருக்க நல்ல இடம் வேண்டும் என்பதை உணர்ந்து தாங்களாகவே களத்தில் இறங்கி அவருக்கு ஒரு இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுக்க முன் வந்தனர். அதன் அடிப்படையில் சாபித்துக்கு அவர் வசிக்கும் நிலத்தில் ஒரு இருப்பிடம் கட்டிக் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

பள்ளி ஆசிரியர்களே களத்தில் இறங்கி கட்டிட பணிகளில் கூட உதவி புரிந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...