சிபிஐ அதிகாரிகளுக்கு இடையேயான ஊழல் புகாரில் ஒருவர் நீக்கம் - நள்ளிரவில் அரங்கேறிய நாடகம்!

அக்டோபர் 24, 2018 463

புதுடெல்லி (24 அக் 2018): ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கு ஒன்றில் ஐதராபாத்தைச் சேர்ந்த சனா பாபு என்ற தொழில் அதிபரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றார் என சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார் ராகேஷ் அஸ்தானா.

மேலும் தன்னுடைய மூத்த அதிகாரி அலோக் வர்மா மீது லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்தார் ராகேஷ் அஸ்தானா. இதனைத் தொடர்ந்து இருவரையும் நேரில் வரச் சொல்லி மோடி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் அலோக் வர்மாவினை அவருடைய பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. அவருடைய பொறுப்புகள் அனைத்தையும் துணை இயக்குநர் நாகேஷ்வர ராவ் பார்ப்பார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...