சிபிஐ ஊழல் யுத்தம் - நெருக்கடியில் மோடி அரசு!

அக்டோபர் 24, 2018 595

புதுடெல்லி (24 அக் 2018): சிபிஐ உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார் மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாக, சிபிஐ தனது சொந்த அலுவகத்திலேயே திங்கட்கிழமையன்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில், டி.எஸ்.பி தேவேந்தர் குமார் ஆவணங்களை கையாள்வதில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இது, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்குடன் தொடர்புடையது.

சிபிஐ, மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படும், அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் அமைப்பு என்ற பொதுக்கருத்து உண்டு. ஆனால் தற்போது சிபிஐ சிக்கித் தவிப்பது அரசியல் ஆயுதங்களினால் அல்ல. தனது அதிகாரிகளிடேயே ஏற்பட்டுள்ள மோதலில், அவர்களின் முகமூடி கிழிந்ததால், விவாதப் பொருளாகியிருக்கிறது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் அதன் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையேயான பிரச்சனையால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகேஷ் அஸ்தானா மோடிக்கு நெருக்கமானவர் என்று அனைவரும் அறிந்தது. குஜராத் கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை கையாண்டவர். அதனாலேயே சிபிஐ சிறப்பு இயக்குநராக அவர் நியமிக்கப் பட்டதாகவும் பேச்சு உண்டு. அதேவேளை அலோக் வர்மா காங்கிரஸ் ஆதரவாளர் என்ற நிலைப்பாடும் உண்டு.

இந்நிலையில்தான் அலோக் வர்மாவினை அவருடைய பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. மோடிக்கு நெருக்கமான ராகேஷ் அஸ்தானாவை காப்பாற்ற அலோக் வர்மாவை பலிகடா ஆக்கியுள்ளது அரசு என்று கூறப்படுகிறது.

உச்சபபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ மீதே ஊழல் குற்றச் சாட்டு வந்துள்ள விவகாரம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...