சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

அக்டோபர் 25, 2018 480

பத்தனம்திட்ட (25 அக் 2018): சபரிமலை வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் நுழைய முடியாமல் சபரிமலை நடை நேற்று சாத்தப் பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம், கோட்டயம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப் பட்டவர்கள் பத்தனம் திட்டா கொண்டு வரப் பட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...