டெல்லியில் துயரம் - 8 வயது சிறுவன் முஹம்மது அஜ்மின் படுகொலை!

அக்டோபர் 26, 2018 748

புதுடெல்லி (26 அக் 2018): டெல்லியில் மதரஸாவில் பயிலும் 8 வயது சிறுவன் அடையாளம் தெரியாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

டெல்லி மலாவியா நகர் பகுதியில் உள்ள மதரஸா விடுதியின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் முஹம்மது அஜ்மின் மற்றும் அவரது நண்பர்கள் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அஜ்மீன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் விஸ்கி பாட்டில், மற்றும் இதர தடயங்களை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...