மதரஸா மாணவன் படுகொலை சம்பவத்தில் சட்ட நடவடிக்கைக்கு களத்தில் இறங்குகிறது எஸ்டிபிஐ!

அக்டோபர் 26, 2018 993

புதுடெல்லி (26 அக் 2018): டெல்லி மதரஸா மாணவன் முஹம்மது அஜ்மின் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படுகொலை தொடர்பாக சட்ட நடவடிக்கையில் எஸ்டிபிஐ கட்சி களத்தில் இறங்கியுள்ளது.

டெல்லி மலாவியா நகர் பகுதியில் உள்ள மதரஸா விடுதியின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் முஹம்மது அஜ்மின் மற்றும் அவரது நண்பர்கள் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப் பட்டார். இதில் படுகாயம் அடைந்த அஜ்மீன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சிறுவன் முஹம்மது அஜ்மீன் கொலை சம்பவத்தில் டெல்லி மாநில எஸ்டிபிஐ களத்தில் இறங்கியுள்ளது. வழக்கறிஞர் அஸ்லம் அஹமது அடங்கிய குழு இச்சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...