சிதைந்த முஹம்மது அஜீம் கனவுகள் - தந்தை கதறல்!

அக்டோபர் 27, 2018 760

புதுடெல்லி (27 அக் 2018): டெல்லியில் மதரஸா ஒன்றில் பயின்று வந்த 8 வயது சிறுவன் படுகொலை செய்யப் பட்ட நிலையில் அவனது கனவுகளும் எங்களது கனவுகளும் சிதைந்து விட்டதாக அஜ்மின் தந்தை தெரிவித்துள்ளார்.

டெல்லி மலாவியா நகர் பகுதியில் உள்ள மதரஸா விடுதியின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் முஹம்மது அஜீம் மற்றும் அவரது நண்பர்கள் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப் பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அஜீம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நான்கு பேரும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் யார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

இந்நிலையில் சிறுவனின் தந்தை கலீல் அஹமது தெரிவிக்கையில், "எனக்கு மூன்று மகன்கள், அஜீமுக்கு 8 வயது, மற்றும் 13 வயது முஸ்தகீம், 11 வயது முஹம்மது முஸ்தபா ஆகியோரில் அஜீம் மிகவும் புத்திசாலி. அரபி மற்றும் ஆங்கிலத்தில் நன்கு பயிற்சி பெற்றவன் அஜீம். தெற்காசிய நாடுகளிலிருந்து மேல் சிகிச்சைக்காக் இந்தியா வரும் நோயாளிகளுக்கு மொழியாக்கம் செய்து சேவை செய்ய வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது." என்று தெரிவித்தார் கண்ணீருடன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...