சிபிஐ யை தொடர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் ரிசர்வ் வங்கி!

அக்டோபர் 30, 2018 652

புதுடெல்லி (30 அக் 2018): மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பணிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது அது மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு வட்டி விகிதம் தொடர்பான விவகாரம், நீரவ் மோடி விவகாரம், பொதுத் துறை வங்கிகளை முறைப்படுத்தும் விவகாரம் அதற்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என அனைத்திலும் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மனக்கசப்பு இருந்து வருவது அனைவரும் அறிந்தது..

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவியிலிருந்து சென்றபோது, மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், உர்ஜித் படேல் பதவிக்கு வந்தார். உர்ஜித் படேல் குஜராத்காரர், தன்னுடைய பிடியில் இருப்பார் என்ற கணக்கில் காய் நகர்த்தினார் மோடி. ஆனால், தற்போது உர்ஜித் படேல் பிரச்சனையை துவங்கியுள்ளார்.

மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதில்லை என்கிற குற்றச் சாட்டை உர்ஜித் படேல் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட பணிப்போர் அடுத்து நாட்டின் மிக முக்கியமான ரிசர்வ் வங்கியுடனும் தொடர்வது பொது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...