3000 கோடியில் பட்டேலுக்கு சிலை வைத்த அதே தினத்தில் கேரள முதல்வர் செய்த வியத்தகு காரியம்!

நவம்பர் 02, 2018 1042

திருவனந்தபுரம் (02 நவ 2018): சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்த தினத்தில் கேரள முதல்வ பினராயி விஜயன் செய்த உபயோகமான காரியம்தான் தற்போது ஹாட் டாக்.

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ரூ 3000 கோடி செலவில் பிரதமர் மோடி குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலை வைத்த அதே தினத்தில் கேரளாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த வருடம் ஓக்கி புயலில் பாதிக்கப் பட்டு வீடுகளை இழந்த ஏழை மீனவ தொழிலாளிகளுக்கு ரூ 20 கோடி செலவில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் இலவச வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

மூவாயிரம் கோடி செலவில் சிலை வைத்ததை விட ஏழை மீனவ தொழிலாளிகளுக்கு பினராயி விஜயன் வீடு கட்டி கொடுத்ததுதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...