டேங்கர் லாரி மீது மோதிய கத்தர் ஏர்வேய்ஸ் விமானம் - உயிர் தப்பிய பயணிகள்!

நவம்பர் 02, 2018 692

கொல்கத்தா (02 நவ 2018): கத்தார் ஏர்வேய்ஸ் விமானம் தண்ணீர் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் ஏர்வேய்ஸ் QR 540 விமானம் கொல்கத்தாவிலிருந்து தோஹாவை நோக்கி நேற்று நள்ளிரவு 03: 15க்கு புறப்பட்டது. அதில் 101 பயணிகளும் 12 சிப்பந்திகளும் 2 பைலட்டுகளும் இருந்தனர்.

இந்நிலையில் ரன்வேயில் தண்ணீர் லாரி விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். எனினும் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. உடனே பயணிகள் விமானத்திலிருந்து அவசரமாக கீழிறக்கப் பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப் பட்டனர்.

மேலும் இவ்விபத்து குறித்து நடத்தப் பட்ட விசாரணையில் டேங்கர் லாரியில் பிரேக் பிடிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலதிக விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...