ஜாதீய கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை!

நவம்பர் 02, 2018 773

ஐதராபாத் (02 நவ 2018): ஜாதி கொடுமை தாங்காமல் தாழ்த்தப் பட்ட இனத்தை சார்ந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். செல்ல மகளை பெற்றோர் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள். சீனாவுக்கு மேற்படிப்புக்காகவும் அனுப்பி வைத்தார்கள். அங்கு உயர் ஜாதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்துள்ளார். இவர்களுக்கு, கடந்த 2015-ம் ஆண்டு திருமணமும் நடந்தது.

இருவரும் மகிழ்ச்சியாகவே குடும்பம் நடத்தியுள்ளனர். ஆனால் அது நீடிக்கவில்லை. வரதட்சனை கேட்டு கார்த்திக் குடும்பத்தினர் ஜெயஶ்ரீயை துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜாதி பெயரை கூறியும் பேசியுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்தன் ஜெயஶ்ரீ தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...