முஸ்லிம் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 38 பேர் கைது!

நவம்பர் 03, 2018 977

பாட்னா (03 நவ 2018): பிஹாரில் முஸ்லின் ஒருவர் எரித்துக் கொலை செய்யப் பட்டது தொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிஹார் சித்தமர்தி பகுதியில் அக்டோபர் 20 ஆம் தேதி துர்கா பூஜை ஊர்வலத்தின் போது அவ்வழியே வந்த ஜைனுல் அன்சாரி என்பவரை ஊர்வலத்தில் இருந்த கலவரக் காரர்கள் இழுத்துச் சென்று உயிரோடு எரித்துக் கொலை செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது இந்த கொலையில் தொடர்புடைய 38 பேரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக துர்கா பூஜை ஊர்வலம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்லக் கூடாது என்று தடை விதிக்க கோரிக்கை விடுத்திருந்தும் போலீஸ் அதனை கண்டுகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...