ஜித்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து - பயணிகள் பரிதவிப்பு!

நவம்பர் 04, 2018 666

கொச்சி (04 நவ 2018): தொழில் நுட்ப கோளாறு காரணமாக கொச்சியிலிருந்து ஜித்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கொச்சியிலிருந்து ஜித்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை அன்று 7 மணி நேரம் தாமதமாக ஜித்தா வந்தடைந்தது. இதனால் ஜித்தாவிலிருந்து கொச்சி செல்ல வேண்டிய பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப் பட்டனர். அவர்கள் அனைவரும் சனிக்கிழமை காலை கொச்சிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

இந்நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் கொச்சியிலிருந்து ஜித்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பலர் நாளை ஞாயிற்றுக் கிழமை வேலைக்கு செல்லும் வகையில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில் விமானம் ரத்து என்பதால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...