ஹாஷிம்புரா முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் ஆயுதப் படை வீரர்களுக்கு ஆயுள் தண்டனை!

நவம்பர் 04, 2018 698

புதுடெல்லி (04 நவ 2018): உத்திர பிரதேசம் ஹாஷிம்புரா கலவரம் தொடர்பாக 38 அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்த உத்தரப்பிரதேச ஆயுதப்படையை (PAC) சேர்ந்த 16 முன்னாள் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் 31 ஆண்டுகள் கழித்து தண்டனை வழங்கியுள்ளது.

உத்திர பிரதேசம் ஹாஷிம்புரா பாபர் மசூதி விவகாரத்தின் போது வட இந்தியா முழுவதும் ஆங்காங்கே கலவரங்கள் நடந்தன. கலவரத்தைக் கட்டுப்படுத்த அந்த பகுதிகளில் ஆயுதப்படை போலிசார் பணியமர்த்தப்படனர். இதில் உச்சபட்சமாக 1987 ஆம் ஆண்டு பெரும் கலவரம் மூண்டது.

இந்த கலவரத்தின் போது ஆயுதப்படை வீரர்கள் ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லீம்கள் 45 பேரை விசாரணைக்கு எனப் பொய் சொல்லி லாரிகளில் ஏற்றிச்சென்று காஸியாபாத் கால்வாய் அருகே கொண்டு சென்று கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தினர். இதில் 38 பேர் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரது உடல் கால்வாயில் அடித்து செல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்தவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடந்தது.

1987 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத செயலுக்கு தற்போதுதான் நீதி கிடைத்துள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சம்மந்தப்பட்ட 17 பேரில் 16(ஒருவர் இறந்துவிட்டார்) பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் இந்த சம்பவத்தில் சம்மந்த பட்ட உயரதிகாரிகள் யாருக்கும் தண்டனை வழங்கபடவில்லை. எனபது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...