கொடூரத்தின் உச்சம் - தீவிர சிகிச்சை பிரிவில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு!

நவம்பர் 04, 2018 1152

லக்னோ (04 நவ 2018): நாட்டின் கொடூரத்தின் உச்சமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் மருத்துவமனை ஊழியர்களால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவர் உடலில் விஷத்தின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் 31-ம் தேதி பின்னிரவு அந்த மருத்துவமனையில் கம்பவுன்டராக பணிபுரியும் சுனில் ஷர்மா மற்றும் மேலும் 3 பேர் தன்னை கற்பழித்து விட்டதாக பொது வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர் தனது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்தார்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வன்புணர்வு, படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...