ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

நவம்பர் 07, 2018 474

புதுடெல்லி (07 நவ 2018): தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.

நேற்று தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தீபாவளி கோலகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று தீபாவளியைக் கொண்டாட பிரதமர் மோடி கேதர்நாத் சென்றுள்ளார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட இருக்கிறார் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடியுடன் சில முக்கிய அமைச்சர்கள் உட்பட பலர் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை இன்று கொண்டாட உள்ளனர். கேதர்நாத் சென்ற நரேந்திர மோடி அங்கிருக்கும் புனித தலத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களின் மத்தியில் நரேந்திர மோடி பேசிய போது ”நீங்கள் இந்த நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றினால் தான் 125 கோடி இந்தியர்களின் கனவு மற்றும் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

அங்குள்ள வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நரேந்திர மோடி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...