குஜராத் அகமதாபாத் பெயரையும் மாற்றம் செய்ய பாஜக முடிவு!

November 07, 2018

புதுடெல்லி (07 நவ 2018): குஜராத் தலைநகர் அகமதாபாத் பெயரையும் மாற்றம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர் மாற்றம் செய்தார்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலுள்ள பழங்கால நகரமான அகமதாபாத் நகரை கர்னாவதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியது, பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அகமதாபாத் நகரை பெயர் மாற்றிட திட்டமிட்டிருந்தது. விரைவில் அகமதாபாத் நகரம் கர்னாவதி என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!