சபரிமலை புனிதத்தை கெடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீது சபரிமலை நிர்வாகம் குற்றச் சாட்டு!

நவம்பர் 07, 2018 705

திருவனந்தபுரம் (07 நவ 2018): சபரிமலை 18 ஆம் படி புனிதத்தை கெடுத்ததாக ஆர் எஸ் எஸ் மீது சபரிமலை தேவசம் போர்டு குற்றஞ்சாட்டியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே நேற்று மாலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. இன்று காலை 52 வயதான பெண் ஒருவர் கோவிலுக்கு வந்தார். ஆனால், இளம் வயது பெண் கோவிலுக்குள் வந்துவிட்டதாக கூறி அங்கு தகவல் பரப்பப்பட்டது.

கோவிலுக்குள் இளம் பெண் வந்துவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து, பக்தர்கள் 18-ம் படிக்கு அருகே குவிந்து நின்று கோஷம் எழுப்பினர். அப்போது, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான வல்சன் தில்லங்கேரி என்பவர் திடீரென 18-ம் படி மீது ஏறி அங்கிருந்த கூட்டத்தின் முன்னர் பேசினார்.

18-ம் படியில் இருமுடிக்கட்டு இல்லாமல் யாரும் ஏறக்கூடாது, ஏறிய பின்னர் பாதி வழியில் திரும்பி கீழே இறங்கக்கூடாது என்ற ஐதீகம் பின்பற்றப்படும் நிலையில், வல்சன் தில்லங்கேரி இரு ஐதீகங்களையும் மீறியதாக தேவசம் போர்டு குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...