சிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி!

நவம்பர் 08, 2018 551

மீரட் (08 நவ 2018): உத்தர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மில்லக் கிராமத்தில் புதன்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்து தீபாவளிபண்டிகையை கொண்டாடியுள்ளனர். அப்போது சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். திடீர் என பட்டாசு விபத்தில் அந்த குழந்தை பலத்த காயமடைந்துள்ளார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறிய படி குழந்தை வீட்டிற்க்குள் வந்துள்ளது.

இதை கண்ட அவரது தந்தை உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்த்துள்ளனர்.

இதையடுத்து, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசை வைத்து வெடிக்க செய்ததாக காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை சசிகுமார் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...