சிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா? -மோடிக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!

நவம்பர் 10, 2018 614

பெங்களூரு (10 நவ 2018): சிலைக்கு 3000 கோடி செலவு செய்யும் மோடி அரசு கேரள வெள்ள பாதிப்புக்கு வெறும் 500 கோடி வழங்கியது எந்த வகையில் நியாயம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் மத்திய அரசை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ரூ 3000 கோடி செலவில் சிலை வைத்தது குறித்து விமர்சித்துள்ள ராஜ், கேரள வெள்ள பாதிப்பில் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்தும் வெறும் 500 கோடி வழங்கியுள்ள மத்திய அரசு சிலைக்கு 3000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...