புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடித்துக் கொலை!

நவம்பர் 10, 2018 729

லக்னோ (10 நவ 2018): உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவமாக ரெயிலில் வைத்து கர்ப்பிணி பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சின்னத் தேவி என்ற 45 வயது கர்ப்பிணி பெண் பஞ்சாப் - பிஹார் ஜாலியன்வாலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது அதில் பயணம் மேற்கொண்ட சக ஆண் பயணி சோனு யாதவ் என்பவர் புகை பிடித்துள்ளார். இதனை கண்ட சின்னத் தேவி தான் கர்ப்பிணி என்றும் மூச்சுத் திணறல் ஏற்படுவதால் புகை பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதனால் கோபமடைந்த அந்த பயணி சின்னத் தேவியை தாக்கியதாக கூறப் படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சின்னத் தேவியை அருகில் உள்ள மருத்துவ மனையில் அவருடன் பயணித்த உறவினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்ச்சை பலனின்றி சின்னத் தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சோனு யாதவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...