மத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்!

நவம்பர் 12, 2018 525

புதுடெல்லி (12 நவ 2018): மத்திய ரசாயனம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், உடல்நலக் குறைவால் காலமானார்.

59 வயதான அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த மாதம் 20 ஆம் தேதி கர்நாடகா பசவன்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆனந்த், நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவருக்கு தேஜஸ்வினி என்ற மனைவியும், ஐஸ்வர்யா, விஜிதா என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனந்த்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு (தெற்கு) தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக அனந்த் குமார் பொறுப்பேற்றார். அதனைதொடர்ந்து, 2016-ல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...