இந்திய அரசின் அனுமதி இன்றி இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியாது!

நவம்பர் 20, 2018 1577

புதுடெல்லி (20 நவ 2018): இந்த 18 நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் இனி இந்திய அரசின் அனுமதி இன்றி பயணிக்க முடியாது.

இதற்கு முன்பு கீழ்க்கண்ட 18 நாடுகளுக்குப் பயணிக்க Emigration Check Required (ECR) உள்ளவர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்றிருந்த சட்டம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அதன்படி 18 நாடுகளுக்கு பயணிக்கும் Emigration Check NOT Required (ECNR) அதாவது அனைத்து இந்தியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும் நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கத்தார்
ஐக்கிய அமீரகம் (UAE)
சவூதி அரேபியா (Saudi Arabia)
பஹ்ரைன்
ஓமன்
மலேசியா
ஆப்கானிஸ்தான்
இந்தோனேசியா
ஈராக்
ஜோர்டான்
குவைத்
லெபனான்
லிபியா
சூடான்
தெற்கு சூடான்
சிரியா
தாய்லாந்து
எமன்

இந்த முன்பதிவை இந்திய அரசின் www.emigrate.gov.in இணைய தளம் மூலம் செய்யலாம். இந்த முன்பதிவானது குறைந்த பட்சம், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு முடித்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யாத பயணிகள் மேற்கூறிய நாடுகளுக்கு பயணிக்க இனி அனுமதிக்கப் பட மாட்டார்கள். கூடுதல் விபரங்களுக்கு இந்நேரம்.காம் தளத்தின் வளைகுடா பகுதியை பார்வையிடவும்.

இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...