கேரள காங்கிரஸ் எம்.பி ஷாநவாஸ் சென்னையில் மரணம்!

நவம்பர் 21, 2018 474

சென்னை (21 நவ 2018): கேரள காங்கிரஸ் எம்பி ஷாநவாஸ் சென்னையில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

கேரளாவில் உள்ள வயநாடு என்ற மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வந்தவர் எம்.ஐ.ஷானவாஸ் (67). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

ஷானவாஸ் எம்பி அவர்களின் மரண செய்தி கேட்டு காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய குடும்பத்திற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...