பேருந்தில் கல்லூரி மாணவி முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட இளைஞர்!

நவம்பர் 21, 2018 3858

புதுடெல்லி (21 நவ 2018): டெல்லியில் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவி முன்பு சுய இன்பம் அனுபவித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப் பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த புகாரில், தினமும் கல்லூரிக்கு பேருந்தில் டெல்லி கப்சேராவிலிருந்து வசந்த் குஞ்ச் வரை பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில், அந்த மாணவி நேற்று காலையில் பயணம் செய்த போது இடைவெளியில், அந்த பெண்ணின் அருகில் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். பின்னட் அந்த ஆண் சிறிது நேரத்திற்கு பின்னர், அந்த பெண்ணை அவர் பாலியல் தொந்தரவு செய்ய ஆரமித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் கண்முன்னரே சியா இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதை கண்ட அந்த பெண்மணி அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால், அந்த பேருந்தில் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. இதை தொடர்ந்து அந்த பெண் இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...