பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்திலேயே கட்டப்பட வேண்டும் : எஸ்டிபிஐ!

நவம்பர் 27, 2018 658

புதுடெல்லி (27 நவ 2018): பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்திலேயே மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்டிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் ஆர் எஸ் எஸ், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் நடத்திய பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணிக்கு எஸ்டிபிஐ அழைப்பு விடுத்துள்ளது. இந்துத்வா அமைப்புகள் 5 லட்சம் பேரை அழைத்தார்கள் என்றால் எஸ்டிபிஐ 25 லட்சம் பேரை அழைத்து வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்போது பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்திலேயே மீண்டும் பாபர் மசூதியை கட்டி எழுப்ப அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் இதனை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி பேரணியில் வலியுறுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...