டோல் கட்டண முறையில் இனி புதிய வசதி!

நவம்பர் 27, 2018 538

புதுடெல்லி (27 நவ 2018): டோல் கட்டணம் இனி பயணம் செய்யும் தூரத்துக்கு மட்டும் வழங்கும் வகையில் வசதி செய்யப் படவுள்ளது.

மத்திய நெடுஞ்சாலைத் துறை, தற்போது இருக்கும் Toll (டோல்) கட்டண விதிமுறையை மாற்றி, புதிய டோல் விதிமுறைகளைக் கொண்டுவரப்போவதாகக் கூறியிருக்கிறது. தற்போது இருக்கும் விதிமுறைகளின்படி நாம் நெடுஞ்சாலை வழியாக ஒரு ஊருக்குள் நுழையும்போது, அந்த சாலைக்கு கட்டணம் செலுத்துகிறோம். இரண்டு Toll Gate-க்கு இடையிலான தூரத்துக்கு இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.*

வரவிருக்கும் புதிய விதிமுறையின்படி ஒரு கட்டண சாலையைக் கடந்து நாம் எவ்வளவு தூரம் அந்த சாலையைப் பயன்படுத்துகிறோமோ அந்த தொலைவுக்கு மட்டும் Toll கட்டணம் செலுத்தினால் போதும். இன்னும் மூன்று மாதத்தில் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. முதல்கட்டமாக, தேசிய விரைவு சாலைகளில் மட்டுமே இதைக் கொண்டுவரவுள்ளார்கள். இந்த நெடுஞ்சாலைகளில் நுழைந்து வெளியேறுவதற்கான பாதை குறைவு என்பதால், இங்கு கொண்டுவருவது சுலபம் என்று சொல்கிறார்கள்.

டோல் கேட்டில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, ஃபாஸ்ட்டேக் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் கட்டணம் செலுத்துபவர்களுக்குத் தள்ளுபடி தரவுள்ளதாகவும் கூறியுள்ளார்கள். மேலும், போராட்டங்களின்போது Toll gate அடித்து நொறுக்கப்படுவதால், புதிய Toll gate-களை ஊரில் இருந்து தொலைவாகக் கட்டவேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...