அயோத்திக்கு வந்தவை அவ்வளவு கூட்டமா? - அனைத்தும் பொய்யான புகைப்படங்கள்!

நவம்பர் 27, 2018 1027

அயோத்தி (27 நவ 2018): அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி இந்துத்வா அமைப்புகள் ஞாயிறன்று பேரணி ஒன்றை நடத்தியது.

இந்த பேரணியில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றதாக இந்துத்வா அமைப்புகள் தெரிவித்தன. மேலும் அதற்கான புகைப்படங்களையும் பேரணி நடந்த அடுத்த நாள் வெளியிட்டன. ஆனால் உண்மையில் அவை போலியான புகைப்படங்கள் என்று தெரிய வந்துள்ளது.

அவை 2017 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மராட்டா போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி கோரி பல்லாயிரக்கணக்கான மராத்தியர்கள் மாநில தலைநகர் மும்பையில் உள்ள பைகுலா பகுதியில் தொடங்கி ஆசாத் மைதானம் வரை அமைதிப் பேரணி நடத்தினார்கள். அந்த புகைப்படங்களை வெளியிட்டு அயோத்திக்கு வந்ததாக இந்துத்வா அமைப்புகள் பொய்யான விளம்பரம் தேடியது.

போலி புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் தேடுவது இந்துத்வா அமைப்புகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...