சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை கைது!

நவம்பர் 28, 2018 1131

திருவனந்தபுரம் (28 நவ 2018): சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை ரெஹானா ஃபாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவில் நடை கடந்த அக்டோபா் மாதம் திறக்கப்பட்ட நிலையில் பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறி போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது கோவிலிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஆபாச நடிகை ரெஹானா பாத்திமாவும், ஆந்தராவைச் சோ்ந்த பத்திரிகையாளா் ஒருவரும் காவல்துறையினரிடம் அனுமதி கோரினர், ஆனால் அங்கு போராட்டம் வலுத்ததால் பாதியிலேயே இருவரும் திரும்பி வந்தனர்.

இந்நிலையில் சபரிமலை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததாகவும், ஆபாசமாக படம் வெளியிட்டதாகவும் அவர் மீது புகார் அளிக்கப் பட்டது, இதனை அடுத்து ரெஹானா ஃபாத்திமாவை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...