டெல்லியை அலறடித்த விவசாயிகள்!

நவம்பர் 30, 2018 583

புதுடெல்லி (30 நவ 2018): நாடாளு மன்றத்தை நோக்கி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லியில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.

நியாயமான கொள்முதல் விலை, விவசாய கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ராம்லீலா மைதாத்தில் குவிந்துள்ளனர்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பின் பேரில் விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலையிலிருந்து தலைநகரில் வந்திறங்கினர்.

இந்த விவசாயிகள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகன் டெல்லிக்கு வந்தனர்.

"கடந்த முறையும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் திரண்டோம். ஆனால், பிரதமர் மோடி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்த முறையும் எங்கள் கோரிக்கைக்கு செவி கொடுத்து கேட்கவில்லை என்றால் பேரணியில் நிர்வாணமாக செல்வோம்" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...