சமையல் சிலிண்டரின் விலை குறைப்பு!

நவம்பர் 30, 2018 515

புதுடெல்லி (30 நவ 2018): சமையல் சிலிண்டரின் விலையை ரூ. 6.52 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டரின் விலை ரூ. 500.90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்படுவதற்கு முன்பாக இதன் விலை ரூ.507.42 - ஆக இருந்தது. இந்த தகவலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் சமையல் சிலிண்டரின் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ. 133 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மானியம் இல்லாத சிலிண்டரின் விலை தற்போது ரூ. 809.50 - ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டருக்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...