சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கிய இரண்டு இந்தியர்களின் பெயர் வெளியீடு!

டிசம்பர் 03, 2018 663

புதுடெல்லி (03 டிச 2018): கறுப்புப் பணம் பதுக்கிய இரண்டு இந்திய நிறுவனங்களின் பெயரை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் குறித்தும் அவர்களின் பெயர்கள் குறித்தும் தொடர்ந்து மறுத்து வந்த ஸ்விட்சர்லாந்து அரசு 2 நிறுவனங்களின் பெயர்களை தற்போது வெளியிட்டுள்ளது

மும்பையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெசிக் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களே அவை. இந்த 2 நிறுவனங்களின் மீதும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஸ்விட்சர்லாந்து அரசு, அவை ஸ்விஸ் வங்கியில் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் தொடர்பான விவரங்களை அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...