மோடியின் நட்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய கடற்படை!

டிசம்பர் 04, 2018 537

புதுடெல்லி (04 டிச 2018): அனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய கடற்படை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு 5 ரோந்துக் கப்பல்களை ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிக்கொடுக்க, ‘பிபாவவ்’ என்ற பாதுகாப்பு மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால், 2016-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தையே அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ விலைக்கு வாங்கியது. இதனால், கடற்படையின் ஒப்பந்தம் இயல்பாகவே ரிலையன்ஸ் டிபென்ஸ் வசம் வந்தது.

‘பிபாவவ்’ ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தப்படி, ரோந்துக் கப்பல்களை 2015-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கடற்படையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், நிறுவனம் ரிலையன்ஸ் வசம் சென்றபிறகும் பணிகள் முடிக்கப்படவில்லை.

இந்நிலையில், ரோந்துக் கப்பல் தயாரித்து அளிப்பதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருந்த வங்கி உத்தரவாதத்தொகையை ரொக்கமாக மாற்றி, இந்திய கடற்படை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை என்று கூறியுள்ள கடற்படைத் தலைவர் அட்மிரல் லான்பா, அதுபற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மோடி அரசுக்கு நெருக்கமான ரிலையன்ஸ் நிறுவனம் மீதான, கடற்படையின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...