இந்துத்வா அமைப்புகளின் திட்டமிட்ட சதி - திடுக்கிட வைக்கும் தகவல்!

டிசம்பர் 05, 2018

லக்னோ (05 டிச 2018): உத்திர பிரதேசத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி சுபோத்குமார் சிங் இந்துத்வாவினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப் பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், முகமது இக்லாக் (58) என்ற முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் கும்பல் முதலில் வதந்தியை பரப்பியது. அதனை தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்தே கொன்றது. இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் அங்கிருந்த இறைச்சியை பரிசோதனைக்கு அனுப்பினார். ஆனால் அது ஆட்டிறைச்சி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சுபேத்குமார் சிங் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

மேலும் சுபேத்குமார் சிங்கை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட கும்பல் ஒரு திட்டத்தை தீட்டியிருக்கிறது. அதற்காக வடிவமைக்கப் பட்டதுதான் இன்னொரு மாட்டுக்கறி நாடகம். இந்த கலவரமே இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. புல்சந்தார் வட்டாட்சியர் ராஜ்குமார் பாஸ்கர் இதுகுறித்து திடுக்கிடும் விவரங்களை தெரிவித்துள்ளார்.

பசுவை கொன்று அதன் தோலை மரத்தில் தொங்கவிட்டிருக்கின்றனர். இது மாட்டுக்கறியை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்யும் செயல் அல்ல. காரணம் அப்படி சாப்பிடுபவர்கள் ஒருசிறு பாகத்தை கூட விடாமல் மறைத்து விடுவார்கள். ஆனால் இங்கு எல்லோரும் பார்க்கும் படியாக தொங்கவிடப்பட்டிருக்கிறது.

மேலும் இதுகுறித்து முதல் தகவல் தெரிந்த ஐந்தே நிமிடத்தில் ஆர்எஸ்எஸ் , ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் உடனே வந்துள்ளனர். அதுவும் ஏற்கனவே டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தகவல் தெரிவிப்பதற்கு முன்பே எப்படி தயார் நிலையில் இருந்திருக்க முடியும். தகவல் தெரிந்த ஐந்தே நிமிடங்களில் பல்வேறு பகுதிகளில் உடனே எப்படி 400 க்கும் மேற்பட்டோர் கூட முடியும். அதுவும் வந்து சேர்ந்தவுடன் உடனே எப்படி கலவரத்தில் ஈடுபட முடியும்.. இது முன்திட்ட மிட்ட படுகொலையே ஆகும் என வருவாய் வட்டாச்சியர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இவரின் கூற்றை உறுதி படுத்தும் காவல்துறை அதிகாரிகள், அதற்கான காரணத்தையும் முன் வைக்கின்றனர். முதலில் மறியல் செய்வது போல்கூடியவர்கள், காவல்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென் அனைவரும் தாக்குதல் தொடுத்தனர். அதில் குறிப்பாக இக்லாக் வழக்கை விசாரித்து ஆதரங்களை சேகரித்து வந்த சுபோத் குமார் சிங்கை குறிவைத்து தாக்கினர். அதோடு மட்டுமல்லாமல் அவரது கண்ணை குறிவைத்து சுட்டனர்.

சுபோத்குமார் சிங் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது, அவரை மீட்டு நாங்கள் ( காவல்துறையினர்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அதை அறிந்த அந்த கும்பல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்து மீண்டும் சுபோத்குமார் சிங் மீது தாக்குதல் நடத்தியதோடு, எங்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். அதன் பின்னர் நாங்கள் அவரை விட்டு விட்டு தப்பி ஓடி வந்தோம். இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுபோத்குமார் சிங்கை கொல்வதற்காக நடத்தப்பட்ட கலவரமாகவே தெரிகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்த கலவரம் மற்றும் சுபோத்குமார் சிங் கொலை குறித்து ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், ஹிந்து யுவா வாஹினி அமைப்புகளை சேர்ந்த 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் முதன் முதலில் மாட்டு தோல் இருப்பதாக சுபோத்குமாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்த பஜரங்தளை சேர்ந்தவரை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்கின்றனர்.

இந்த படுகொலையின் மூலம் நேர்மையான அதிகாரிகளுக்கு இந்தியாவில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது தெளிவாகிறது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!