உத்திர பிரதேச பாஜக எம்.பி கட்சியை விட்டு திடீர் விலகல்!

டிசம்பர் 06, 2018 418

லக்னோ (06 டிச 2018): உத்திர பிரதேச பாஜக எம்.பி சாவித்ரி பாய் போலே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பாஜக மக்கவுளிய்டையே பிளவை ஏற்படுத்துவதாகவும், பிரிவினையை தூண்டுவதாகவும் கூறி கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் மாட்டுக்கறி புரளியை கிளப்பி கலவரத்தை தூண்டியதோடு, போலீஸ் அதிகாரியையும் கொலை செய்த நிலையில் இச்சம்பவத்தை சாவித்ரி பாய் போலே கடுமையாக விமர்சித்திருந்தார்.

சாவித்ரி பாய் போலே தலித் இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...