உத்திர பிரதேசம் முதலிடம் - எதில் தெரியுமா?

டிசம்பர் 06, 2018 562

லக்னோ (06 டிச 2018): மாட்டின் பெயரால் நடக்கும் வன்முறைகளில் உத்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

யாஸ்பெண்ட்’ செய்தி நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. அதில், இந்தியாவிலேயே, உத்தரப்பிரதேசத்தில்தான் மாட்டின் பெயரிலான வன்முறைகள் அதிகளவில் நடக்கிறது என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில்தான் பசு பாதுகாப்பு என்ற பெயரிலான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது மிகுதியாக இருக்கிறது என்று கூறியுள்ள ஆய்வு, அதிலும் குறிப்பாக, “சம்பவங்களின் எண்ணிக்கையிலும், மரணங்களின் எண்ணிக்கையிலும் உத்தரப் பிரதேசம் அதில் முதலிடத்தில் உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த வன்முறைகளில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே தாக்குதலுக்கு ளாவதாகவும், பத்தில் ஒரு நபர் தலித்தாக இருக்கிறார்” என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...