உத்திர பிரதேசம் காவல்துறை அதிகாரி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

டிசம்பர் 08, 2018 711

லக்னோ (08 டிச 2018): உத்திர பிரதேசம் காவல்துறை அதிகாரி சுபேத் குமார் சிங் படுகொலை வழக்கின் திடீர் திருப்பமாக ராணுவ வீரர் ஒருவர் சுபேத் குமாரை சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஹர் மாவட்டத்தின் மஹாவ் என்ற கிராமத்தில் மாடுகள் இறந்து கிடந்ததாக கூறி இந்துத்வாவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் காவலர்களுக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சுபோத் குமார் சிங் என்ற காவல் துறை ஆய்வாளர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதே கலவரத்தில், இளைஞர் ஒருவரும் இறந்துள்ளார்.

ஆனால் உயிரிழந்த சுபேத் குமார் சிங், உடலில் துப்பாக்கிக் குண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும் இவர், கடந்த 2014-ம் ஆண்டு மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அடித்துக்கொல்லப்பட்ட அக்லக் வழக்கை விசாரித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தபோதே, சுபோத் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாகவே சில மர்மக் கும்பல் போராட்டத்தில் நுழைந்து சுபேத் குமாரை கொலை செய்ததாக கூறப் பட்டது.

இந்நிலையில் தற்போது அடுத்த திருப்பமாக ஜிதேந்ரா மாலிக் என்ற ராணுவ வீரருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதற்கான வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில் ஜிதேந்திரா மாலிக்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ஜிதேந்தர் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...