வைர வியாபாரி கொலையில் திடீர் திருப்பம் - பிரபல நடிகை கைது!

டிசம்பர் 09, 2018 576

மும்பை (09 டிச 2018): வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானியின் மரணம் தொடர்பான வழக்கில் இந்தி தொலைக்காட்சி நடிகை தேவ லீனா கைது செய்யப் பட்டுள்ளார்.

மும்பை காட்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி. இவரது அலுவலகம் விக்ரோலியில் இருக்கிறது. கடந்த மாதம் 29-ம் தேதி அலுவலகத்தில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அவரது டிரைவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

இதனிடையே பன்வெல் அருகே அணைக்கட்டு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் காணாமல் போன வைர வியாபாரி ராஜேஸ்வரின் உடல் என்பது தெரியவந்தது. ராஜேஸ்வரின் மொபைல் நம்பரைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கில் இந்தி தொலைக்காட்சி நடிகை தேவலீனா பட்டாச்சார்ஜியிடம் நவி மும்பையின் பன்ட் நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். இவர் சாத்நிபானா சாதியா உட்பட பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

இதே போல், மற்றொரு தொலைக்காட்சி நடிகரும், மகாராஷ்டிர அமைச்சர் பிரகாஷ் மேக்தாவின் உதவியாளருமான சச்சின் பவார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலரான தினேஷ் பவார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...